துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15

Oct 8, 2025 - 17:00
 0  7
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் சந்தோஷம் அதிகரிக்கும் வாரம். பல வகையான யோக பலன்களைப் பெற முடியும். சுப காரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். மன நிலை அமைதி கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பண வரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow