துலாம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ஏற்றம், உயர்வு..!
துலாம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ஏற்றம், உயர்வு...!

துலாம் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் நேசிப்பீர்கள்! உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த 2025-ம் ஆண்டு பிறப்பதால் திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகையும் கைக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்க வேண்டி வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு முன்னேறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
இனி குழம்பாமல் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு வாரிசு உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.
What's Your Reaction?