தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத் துறை மீண்டும் உறுதி
“தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு இருக்கிறது’’ என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்: “தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு இருக்கிறது’’ என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று ஏற்கெனவே அறிவித்தார். மேலும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உட்பட அமெரிக்க நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள பலரும் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
What's Your Reaction?