திரைப்படங்களில் நடிக்க அமைச்சர் சுரேஷ் கோபிக்கு தடை

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் அஜித்தின் தினா, ஷங்கரின் ஐ, விஜய் ஆண்டனியின் தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

Nov 11, 2024 - 16:14
 0  3
திரைப்படங்களில் நடிக்க அமைச்சர் சுரேஷ் கோபிக்கு தடை

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் அஜித்தின் தினா, ஷங்கரின் ஐ, விஜய் ஆண்டனியின் தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர், கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சில மலையாளப் படங்களில் ஏற்கெனவே நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததால், தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றும் நடிப்புதான் முக்கியம், விரைவில் அதற்கு அனுமதி கிடைக்கும் என நம்புவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் சுரேஷ் கோபி கூறியிருந்தார். ஆனால் அவர் படங்களில் நடிக்க மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow