திரை விமர்சனம்: தென்சென்னை

கடற்படை மாலுமிக்கான பயிற்சி முடித்த நிலையில் பணியில் இணையாமல் வீடு திரும்பியவன் ஜேசன் (ரங்கா).

Dec 15, 2024 - 10:20
 0  3
திரை விமர்சனம்: தென்சென்னை

கடற்படை மாலுமிக்கான பயிற்சி முடித்த நிலையில் பணியில் இணையாமல் வீடு திரும்பியவன் ஜேசன் (ரங்கா). தன்னுடைய அப்பாவும் தாய்மாமா டோனியும் (இளங்கோ குமணன்) நடத்தி வரும் பாரு டன் கூடிய உணவு விடுதியை மாமாவுடன் சேர்ந்து கவனித்துக் கொள்கிறான். ஆனால், எதிர்பாராத சூழ்நிலையில், தங்கள் உணவகத்தை ருத்ரா என்கிற 'செக்யூரிட்டி' நிறுவனம் நடத்தும் மர்மமான மனிதருக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு அதை மீட்க முடியாமல் தவிக்கிறார்கள். எதனால் அவர்கள் உணவகத்தை இழந்தார்கள்? ருத்ரா உண்மையாக செக்யூரிட்டி நிறுவனம்தான் நடத்துகிறாரா? ஜேசனால் தனது குடும்ப உணவகத்தை மீட்க முடிந்ததா, இல்லையா என்பது கதை.

மாநகரத்தைக் கதைக்களமாகக் கொள்ளும் குடும்ப ஆக்‌ஷன் டிராமா கதைகள். பெரும்பாலும் தாதாயிசம், உள்ளூர் அரசியலின் அழுத்தம், குழு மோதல் என பார்த்துப் பழகிய கதாபாத்திரங்களையும் நீர்த்துப் போன சம்பவங்களையும் கொண்டிருக்கும். அதிலிருந்து விலகி, இப்படத்தின் இயக்குநர் ரங்கா தேர்ந்து கொண்டிருக்கும் பூர்வீக இடத்தை மீட்பது என்கிற மைய பிரச்சினையை உணர்வு குன்றாமல் கையாண்டிருக்கிறார். இந்தப் பிரச்சினையைச் சுற்றி எழுதப்பட்ட நிழலுலகக் கதாபாத்திரங்கள், அவர்களைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் அழுத்தமாகவும் புதிதாகவும் இருக்கின்றன. ‘நான்- லீனியர்’ திரைக்கதை, கதாபாத்திரங்களின் முன்கதைகளை மெல்ல மெல்ல விடுவித்துக்கொண்டே வருவது திரை அனுபவத்துக்குத் தடங்கலற்ற தொடர்ச்சியைக் கொடுத்துவிடுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow