திரை விமர்சனம்: சொர்க்கவாசல்

சாலையோர உணவகம் நடத்தும் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி), செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்கிறார்.

Dec 1, 2024 - 05:05
 0  3
திரை விமர்சனம்: சொர்க்கவாசல்

சாலையோர உணவகம் நடத்தும் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி), செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்கிறார். அங்கு பிரபல ரவுடியான சிகாவுக்கு (செல்வராகவன்) தனி மரியாதை. திருந்தி வாழ ஆசைப்படும் அவருக்கும் புதிதாக வரும் சிறை கண்காணிப்பாளர் சுனில் குமாருக்கும் (ஷராஃபுதீன்) ஈகோ மோதல். சிகாவை அடக்க முயற்சிக்கிறார் அனில் குமார். அந்த மோதல் என்ன விளைவை ஏற்படுத்துகிறது? சிகாவுக்கு என்ன ஆகிறது? சிறைக்குள் சிக்கிய பார்த்திபனால் வெளியே வர முடிந்ததா? என்பதைப் பரபரப்புடன் சொல்கிறது மீதி கதை.

சென்னை மத்தியச் சிறையில் 1999-ம் ஆண்டு நடந்த கலவரப் பின்னணியில் உருவாக்கி இருக்கிறார்கள், இந்தப் படத்தை. விசாரணை அதிகாரியாக வரும் இஸ்மாயிலிடம் (நட்டி) அன்று சிறைக்குள் நடந்த விஷயத்தை ஒவ்வொருவராக சொல்ல, அவர்கள் பார்வையில் கதை விரியும் ‘நான் லீனியர்’ திரைக்கதை படத்துக்குப் பலம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow