திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் மண்டபங்கள் அமைக்கும் பணி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!

பூந்தமல்லி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும்  ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன் மண்டபங்கள் அமைக்கும் பணியை இன்று காலை அமைச்சர்கள் சேகர்பாபு,  சா.மு.நாசர் ஆகியோர்  அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

May 2, 2025 - 16:35
 0  3
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் மண்டபங்கள் அமைக்கும் பணி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!

திருவேற்காடு: பூந்தமல்லி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன் மண்டபங்கள் அமைக்கும் பணியை இன்று காலை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் அமைந்துள்ளது தேவி கருமாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow