திருவல்லிக்கேணி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்
திருவல்லிக் கேணி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்க ள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை: திருவல்லிக்கேணி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் பார்த்த சாரதி பெருமாளுக்கு சித்திரை மாதமும், இங்கு மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாளுக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவங்கள் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
What's Your Reaction?