திருவண்ணாமலை தீபம் குறியீட்டுடன் ஊத்தங்கரை அருகே கல்வெட்டு கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே முதல்முறையாக திருவண்ணாமலை மலை தீபம் குறியீட்டுடன் 3 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே முதல்முறையாக திருவண்ணாமலை மலை தீபம் குறியீட்டுடன் 3 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் புதிய கல்வெட்டு உள்ளதாக ஆசிரியர்கள் வெங்கடேசன், செந்தில் ஆகியோர் கொடுத்த தகவலின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, ஊத்தங்கரை ஒன்றியம் கானம்பட்டி இருசங்கு குட்டை என்ற இடத்தில், பெரிய பாறையின் மேற்பகுதியில், 3 இடங்களில் கல்வெட்டு மற்றும் குறியீடுகள் இருப்பதை கண்டு அதை படியெடுத்தது.
What's Your Reaction?