திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்ப திருவிழா வைர தேரோட்டம்

இத்திருவிழா ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர்.

Feb 7, 2025 - 10:10
 0  4
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்ப திருவிழா வைர தேரோட்டம்

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை தெப்பத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று சிறிய வைரத் தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாதம் தெப்பத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

இத்திருவிழா ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். 9-ம் நாளான நேற்று ஜிஎஸ்டி சாலையிலுள்ள தெப்பத் துக்கு சிறப்பு அலங்காரத்தில் முருகன் தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow