திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலம்: இன்று மாலை சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் 

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று (அக்​.27) மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி,  திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர். 

Oct 27, 2025 - 00:40
 0  2
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலம்: இன்று மாலை சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் 

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று (அக்​.27) மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர்.

கடந்த 22-ம் தேதி யாக​சாலை பூஜை​யுடன் திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் இன்று (அக்​.27) நடை​பெறுகிறது. இதை முன்​னிட்டு அதி​காலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. இன்று காலை 6 மணி​யள​வில் யாக​சாலை பூஜைகள் தொடங்​கு​கின்​றன. காலை 9 மணிக்கு மூல​வருக்கு உச்​சி​கால பூஜை நடை​பெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow