தமிழகத்தில் ஜூலை 14, 16-ல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்

மங்களகரமான தினங்களான ஜூலை 14, 16 தேதிகளில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Jul 12, 2025 - 20:40
 0  4
தமிழகத்தில் ஜூலை 14, 16-ல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்

சென்னை: மங்களகரமான தினங்களான ஜூலை 14, 16 தேதிகளில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16 -ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow