தங்கம் விலை மீண்டும் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது
தங்கம் விலை நேற்று (நவ.12) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று (நவ.13) பவுனுக்கு மேலும் ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.56,360-க்கு விற்பனையாகிறது.

சென்னை: தங்கம் விலை நேற்று (நவ.12) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று (நவ.13) பவுனுக்கு மேலும் ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.56,360-க்கு விற்பனையாகிறது. ஆனால் வெள்ளியில் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து இரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
What's Your Reaction?