தங்கம் விலை 4 நாட்களில் பவுனுக்கு ரூ.1,240 அதிகரிப்பு

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.  இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது.

Mar 29, 2025 - 11:05
 0  5
தங்கம் விலை 4 நாட்களில் பவுனுக்கு ரூ.1,240 அதிகரிப்பு

சென்னை: சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது.

இதன்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.105 அதிகரித்து ரூ.8,340-க்கும், பவுனுக்கு ரூ.840 அதிகரித்து ரூ.66,720-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 4 நாட்களில் பவுனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow