தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 உயர்ந்தது!

சென்னையில் இன்று (மே.6) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,000 என உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.125 என அதிகரித்துள்ளது. 

May 6, 2025 - 11:10
 0  5
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 உயர்ந்தது!

சென்னை: சென்னையில் இன்று (மே.6) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,000 என உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.125 என அதிகரித்துள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ரூ.74,320 என ஒரு பவுன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.160 என உயர்ந்தது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow