தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு - காரணம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Jun 2, 2025 - 23:05
 0  6
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு - காரணம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அமெரிக்க - சீனா இடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை மே 12-ம் தேதி ரூ. 2,360 வரை குறைந்து ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. மே 28-ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow