குகேஷிடம் தோல்வி: விரக்தியில் மேஜையை தட்டிய கார்ல்சன் - நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி சம்பவம்
நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த விரக்தியில் மேஜையை ஓங்கி தட்டினார்.

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த விரக்தியில் மேஜையை ஓங்கி தட்டினார்.
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் திங்கள்கிழமை அன்று ஆறாவது சுற்று ஆட்டத்தில் குகேஷ் மற்றும் கார்ல்சன் விளையாடினர். இதில் அபார கம்பேக் கொடுத்த குகேஷ் வென்றார்.
What's Your Reaction?