தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,640 சரிவு: நகை வியாபாரிகள் சொல்வது என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,640 குறைந்து, ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அட்சய திருதியை நாளில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

May 1, 2025 - 23:15
 0  7

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.12-ம் தேதி பவுன் ரூ.70,160 ஆகவும், ஏப்.22-ம் தேதி ரூ.74,320 ஆகவும் என அடுத்தடுத்து வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இருப்பினும், கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்து, ரூ.72,120 ஆக இருந்தது. இதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி காணப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow