தங்கம் விலை இன்றும் உயர்வு: ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்தை நெருங்கியது

சென்னையில் இன்று (செப்.30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860-க்கு விற்பனையாகிறது.

Sep 30, 2025 - 12:30
 0  6
தங்கம் விலை இன்றும் உயர்வு: ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: சென்னையில் இன்று (செப்.30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow