தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுன் ரூ.82,000-ஐ நெருங்கியது

தங்கம் விலை இன்று (செப்.12) மேலும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.81.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Sep 12, 2025 - 12:15
 0  5
தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுன் ரூ.82,000-ஐ நெருங்கியது

சென்னை: தங்கம் விலை இன்று (செப்.12) மேலும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.81.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்​தது. குறிப்​பாக, அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபாய் மதிப்பு சரிவு உள்​ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை மேலும் உயர்ந்​து, நாள்​தோறும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow