‘தக் லைஃப்’ ரிலீஸ் எப்போது? - கமல்ஹாசன் தகவல்

நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார்.

Feb 1, 2025 - 00:45
 0  4
‘தக் லைஃப்’ ரிலீஸ் எப்போது? - கமல்ஹாசன் தகவல்

நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். இதில் த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றார், கமல்ஹாசன். அங்கு அவர் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பற்றி படிக்கச் சென்றதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு நேற்று திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகும்” என்றார். ‘விக்ரம் 2’ படம் பற்றிக் கேட்டபோது, “நான் வேறு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறேன்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow