‘தக் லைஃப்’ படம் குறித்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டாரா மணிரத்னம்? - மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம்
‘தக் லைஃப்’ படம் குறித்து ரசிகர்களிடம் இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை: ‘தக் லைஃப்’ படம் குறித்து ரசிகர்களிடம் இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, நாசர், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை விமர்சன ரீதியில் வெகுவாக சாடினர். இப்படம் தொடர்பான ட்ரோல்களும் மீம்களும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.
What's Your Reaction?