டெல்லி கேபிடல்ஸ் அணி பணத்துக்காக என்னை தக்கவைக்கவில்லையா? - கவாஸ்கர் கருத்துக்கு ரிஷப் பந்த் மறுப்பு

2025-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதி அரேபி​யா​வின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது.

Nov 20, 2024 - 09:40
 0  5
டெல்லி கேபிடல்ஸ் அணி பணத்துக்காக என்னை தக்கவைக்கவில்லையா? - கவாஸ்கர் கருத்துக்கு ரிஷப் பந்த் மறுப்பு

புதுடெல்லி: 2025-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதி அரேபி​யா​வின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 31-ம் தேதி ஐபிஎல் தொடரில் பங்கேற்​கும் அனைத்து அணிகளும் முக்​கியமான வீரர்களை தக்க​வைத்​துக் கொண்டு மற்ற வீரர்களை விடு​வித்தனர். இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்தை அந்த அணி நிர்வாகம் தக்கவைத்​துக் கொள்​ளாமல் விடு​வித்து இருந்​தது.

இந்நிலை​யில் இந்திய கிரிக்​கெட் அணியின் ஜாம்​பவானும், வர்ணனை​யாள​ருமான சுனில் கவாஸ்கர் ஐபிஎல் ஏலம் முன்னோட்டம் தொடர்பான நிகழ்ச்​சி​யில் பேசுகை​யில், ‘‘ஏல நடைமுறை முற்றி​லும் வேறு​பட்​டது; அது எப்படி செல்​லும் என்று தெரி​யாது. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணி நிச்​சயமாக ரிஷப் பந்த்தை மீண்​டும் அணிக்கு கொண்டு வருவார்கள் என்று நினைக்கிறேன். சில நேரங்​களில், ஒரு வீரரை தக்கவைக்க வேண்டியிருக்​கும்​போது, உரிமை​யாள​ருக்​கும், வீரருக்​கும் இடையே எதிர்​பார்க்​கப்​படும் கட்ட​ணங்கள் குறித்து பேச்சு எழக்​கூடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow