டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ்: பிரக்​ஞானந்தா, குகேஷ் முன்னிலை

டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் இந்திய கிராண்ட்​மாஸ்​டர்கள் டி. குகேஷ், ஆர். பிரக்​ஞானந்தா ஆகியோர் தலா 8.5 புள்​ளி​களுடன் முன்னிலை​யில் உள்ளனர்.

Feb 3, 2025 - 09:30
 0  5
டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ்: பிரக்​ஞானந்தா, குகேஷ் முன்னிலை

விக் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் இந்திய கிராண்ட்​மாஸ்​டர்கள் டி. குகேஷ், ஆர். பிரக்​ஞானந்தா ஆகியோர் தலா 8.5 புள்​ளி​களுடன் முன்னிலை​யில் உள்ளனர்.

நெதர்​லாந்​தின் விக் ஆன் ஜீ நகரில் இந்த செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலை​யில் நேற்று நடைபெற்ற 12-வது சுற்றுப் போட்​டி​யில் உலக சாம்​பியனான டி. குகேஷ், ஹாலந்து வீரர் ஜோர்டன் வான் பாரஸ்​டுடன் டிரா செய்​தார். அதே நேரத்​தில் பிரக்​ஞானந்தா, செர்பிய வீரர் அலெக்ஸி சரானாவை தோற்​கடித்​தார். 12-வது சுற்றின் முடி​வில் குகேஷ், பிரக்​ஞானந்தா இருவரும் தலா 8.5 புள்​ளி​களுடன் முன்னிலை​யில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow