ஜெலன்ஸ்கியுடன் எலான் மஸ்க்கை பேச வைத்த ட்ரம்ப் - முக்கிய பொறுப்பு காத்திருக்கிறதா?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் பேசவைத்தது விவாதப் பொருளாகியுள்ளது.

வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் பேசவைத்தது விவாதப் பொருளாகியுள்ளது. ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி உரையாடலில் எலான் மஸ்க்கும் இடம்பெற்றார் என்பதை உக்ரைன் நாட்டின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
“அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்கை எனது தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பில் அமர வைப்பேன்” என்று ட்ரம்ப் எற்கெனவே கூறியிருந்தார். தற்போது ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான உரையாடலின் போது, எலான் மஸ்க்கையும் ட்ரம்ப் பேச வைத்திருக்கிறார். இது புதிய அரசில் எலான் மஸ்க் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெறுவார் என்பதை உணர்த்துகிறது.
What's Your Reaction?