ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ், 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.

Aug 10, 2025 - 12:05
 0  3
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ், 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.

புலவாயோ நகரில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இங்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 130 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேவன் கான்வே 153, ஹென்றி நிக்கோல்ஸ் 150, ரச்சின் ரவீந்திரா 165, வில் யங் 74 ரன்கள் விளாசினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow