10 அணிகள் கலந்து கொள்ளும் திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி நாளை தொடக்கம்

திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடரின் 3-வது சீசன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (11-ம் தேதி) தொடங்குகிறது.

Aug 10, 2025 - 12:05
 0  5
10 அணிகள் கலந்து கொள்ளும் திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி நாளை தொடக்கம்

சென்னை: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடரின் 3-வது சீசன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (11-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் ‘ஏ’ பிரிவில் வருமான வரித்துறை, மாஸ்கோ மேஜிக், தியானத் வீரன்ஸ், ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்சைஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியன் வங்கி, ஏ.ஜி. அலுவலக அணி, எஸ்.எம். நகர் ஹாக்கி, பட்டாபிராம் ஸ்ட்ரைக்கர்ஸ், தெற்கு ரயில்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow