ஜாஸ் பட்லர் 97 ரன்கள் விளாசல்: டெல்லியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் குஜராத் வீரர் ஜாஸ் பட்லர் 97 ரன்கள் எடுத்தார். 

Apr 19, 2025 - 21:05
 0  4
ஜாஸ் பட்லர் 97 ரன்கள் விளாசல்: டெல்லியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் குஜராத் வீரர் ஜாஸ் பட்லர் 97 ரன்கள் எடுத்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக கருண் நாயர் 31, ராகுல் 28, அக்சர் படேல் 39, ஸ்டப்ஸ் 31, அசுதோஷ் சர்மா 37 ரன்கள் எடுத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow