உயரமான மலைகளில் ஏறி சாதித்த வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

உலகில் உள்ள 7 கண்டங்களில், உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த வீராங்கனைக்கு , சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Jul 9, 2025 - 07:55
 0  4
உயரமான மலைகளில் ஏறி சாதித்த வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: உலகில் உள்ள 7 கண்டங்களில், உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த வீராங்கனைக்கு , சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவர் தற்போது சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின், உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு, பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2023-ல் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து முத்தமிழ் செல்விக்கு, தமிழ்நாடு அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. மேலும் அவருக்கு அரசு சார்பில் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow