ஜானி மாஸ்டர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர், ஜானி மாஸ்டர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர், ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக்குத்து, ரஞ்சிதமே, காவாலா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இவரது குழுவில் இடம்பெற்றிருந்த 21 வயது பெண் நடன கலைஞர் ஒருவர், தன்னை கடந்த 5 வருடமாகப் பலமுறை ஜானி மாஸ்டர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஹைதராபாத் போலீஸில் புகார் கூறினார்.
வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஜானி மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
What's Your Reaction?