ஜவுளித் தொழில் நெருக்கடி: கரூரில் 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தி திறன் குறைப்பு காரணமாக 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Aug 30, 2025 - 16:15
 0  3
ஜவுளித் தொழில் நெருக்கடி: கரூரில் 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

கரூர்: அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தி திறன் குறைப்பு காரணமாக 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோபாலகிருஷ்ணன்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.230 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.2,000 கோடி) மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 60,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதித்திருப்பதால், அமெரிக்க வாடிக்கையாளர்கள் உற்பத்தியாளர்களுக்கு ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்த உத்தரவிடுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow