சொந்தக்காலில் நிற்கிறேன் - வாழ்ந்து காட்டுவோம்!
என் பெயர் சு.பட்டுச்செல்வி, நான் கோவை மாவட்டம், காரமடை வட்டாரம், சிக்கதாசம்பளையம் ஊராட்சியில் வசித்து வருகிறேன்.

என் பெயர் சு.பட்டுச்செல்வி, நான் கோவை மாவட்டம், காரமடை வட்டாரம், சிக்கதாசம்பளையம் ஊராட்சியில் வசித்து வருகிறேன். நான் 12 ஆம் வகுப்புக்குப் பிறகு புகைப்படம் மற்றும் கணினி பயிற்சி முடித்துள்ளேன். என் கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகின்றன, நான், என் அம்மா, என் மகள் மூவரும் ஒன்றாக வசித்து வருகிறோம். பூந்தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளேன்.
நான் ஏழு வருடங்களாகத் தனியார் போட்டோ பிரின்டிங் லேபில் வேலை செய்து வந்தேன். ரூ.9,000 மாத வருமானம் எனக்கும் என் குழந்தையின் படிப்புச் செலவுக்கும் போதுமானதாக இல்லை. எனவே, சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவெடுத்தேன், முதலீட்டுக்கான பணம் என்னிடம் இல்லாததால் வங்கியில் கடனுதவி கேட்டபோது கிடைக்கவில்லை. அதன் பின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் பற்றி மகளிர் குழு கூட்டமைப்பின் மூலம் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நான் வங்கியில் இணை மானியத் திட்டம் மூலம் ரூ.5,00,000 வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தேன். உடனே கடன் கிடைத்தது. இதில் 30% மானியமாக ரூ.1,50,000 கிடைத்தது.
What's Your Reaction?