சைஃப் அலிகான் மீது மர்ம நபர் கத்திக் குத்து: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த நடிகர் சைஃப் அலிகானுக்கு மும்பை லீலாவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

Jan 16, 2025 - 10:40
 0  4
சைஃப் அலிகான் மீது மர்ம நபர் கத்திக் குத்து: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த நடிகர் சைஃப் அலிகானுக்கு மும்பை லீலாவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இன்று (ஜன.16) அதிகாலை 2:30 மணியளவில் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள அவருடைய இல்லத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாகத் தெரிகிறது. அப்போது நடைபெற்ற சண்டையில் சைஃப் அலி கான் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow