செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் - ‘மென்டல் மனதில்’ முதல் தோற்றம் எப்படி?

செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘மென்டல் மனதில்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Dec 13, 2024 - 20:25
 0  5
செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் - ‘மென்டல் மனதில்’ முதல் தோற்றம் எப்படி?

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘மென்டல் மனதில்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியானது ‘நானே வருவேன்’ திரைப்படம். இந்தப் படத்தை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய செல்வராகவன் படத்தை இயக்கவில்லை. இந்நிலையில், அவர் அடுத்து இயக்கும் புதிய படத்தின் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மென்டல் மனதில்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow