சென்னையில் ஜன.25-ல் உலக தொழில்முனைவோர் விழா: 3,000+ நிபுணர்கள் பங்கேற்பு

உல​கின் பல்வேறு நாடு​களில் இருந்து 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழில்​முனை​வோர், நிபுணர்​கள், கண்டு​பிடிப்​பாளர்கள் பங்கேற்​கும் உலக தொழில்​முனை​வோர் விழா  சென்னை​யில் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

Jan 24, 2025 - 11:30
 0  4
சென்னையில் ஜன.25-ல் உலக தொழில்முனைவோர் விழா: 3,000+ நிபுணர்கள் பங்கேற்பு

சென்னை: உல​கின் பல்வேறு நாடு​களில் இருந்து 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழில்​முனை​வோர், நிபுணர்​கள், கண்டு​பிடிப்​பாளர்கள் பங்கேற்​கும் உலக தொழில்​முனை​வோர் விழா சென்னை​யில் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை ஃப்ரீலேன்​ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்​கர்ஸ் ட்ரைப் சார்​பில், தரமணி​யில் உள்ள ஐஐடி ஆராய்ச்​சிப் பூங்​கா​வில் இவ்விழா பிரம்​மாண்​டமாக நடைபெற உள்ளது. சர்வதேச அளவிலான தொழில்​முனை​வோர், புத்​தொழில் நிறு​வனத்​தினர், நிபுணர்​கள், கண்டு​பிடிப்​பாளர்கள் ஆகியோரைக் கொண்​டாடும் வகையில் இந்த விழா நடத்​தப்​படு​கிறது.

இதில், பல்வேறு நாடு​களில் இருந்து 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழில்​முனை​வோர், புதுமை கண்டு​பிடிப்​பாளர்​கள், புத்​தொழில் நிறு​வனத்​தினர் (ஸ்டார்ட்​-அப்) பங்கேற்​கின்​றனர். விழா​வில், கலந்​துரை​யாடல், மாநாடு, கருத்​தரங்​கம், பயிலரங்​கம், கண்காட்சி, சிறந்த தொழில்​முனை​வோருக்கு விருது வழங்​குதல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்​பெறுகின்றன. மேலும், 100-க்​கும் மேற்​பட்ட நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow