சென்னை கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் உள்ள கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் உள்ள கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளான நேற்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்து சிவாலயங்களிலும் நான்குகால பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன. வடபழனி முருகன் கோயிலில் நான்குகால பூஜைகளுக்கு நடுவே விடிய விடிய சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
What's Your Reaction?