சூடானில் குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் பலி

சூடான் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Feb 26, 2025 - 19:10
 0  3
சூடானில் குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் பலி

சூடான்: சூடான் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூடானின் தலைநகரான கர்தூம் அருகே உள்ள ஓம்துர்மானில் உள்ள வாடி ஜெய்ட்வானா ராணுவ தளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை ராணுவ விமானம் ஒன்று கிளம்பியது. அப்போது குடியிருப்பு பகுதியில் திடீரென விழுந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் 46 பேர் பலியானார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அவசரகால மீட்புப் படையினர் குழந்தைகள் உட்பட காயமடைந்த பொதுமக்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow