சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு 3 மடங்காக அதிகரிப்பு

சு​விஸ் வங்​கி​யில் இந்​தி​யர்​கள் பதுக்​கும் பணத்​தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்​காக அதி​கரித்​துள்ள தகவல் வெளி​யாகி உள்​ளது.

Jun 21, 2025 - 01:40
 0  4
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு 3 மடங்காக அதிகரிப்பு

புதுடெல்லி: சு​விஸ் வங்​கி​யில் இந்​தி​யர்​கள் பதுக்​கும் பணத்​தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்​காக அதி​கரித்​துள்ள தகவல் வெளி​யாகி உள்​ளது.

சர்​வ​தேச அளவில் சுவிட்​சர்​லாந்து நாடு சுற்​றுலா​வுக்கு புகழ்​பெற்​றுள்​ளது. அத்​துடன் பெரும் பணக்​காரர்​கள் விரும்​புவது சுவிஸ் வங்​கி​கள்​தான். சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்​பவர்​களின் விவரங்​கள் வெளி​யிடப்​படு​வ​தில்​லை. அதுவே பணக்​காரர்​களுக்கு பாது​காப்​பாக கருதப்​படு​கிறது. அத்​துடன், கரன்​சி​யின் மதிப்பு குறைந்​தா​லும், பொருளா​தார நெருக்​கடி, அரசி​யல் ஸ்திரமற்ற நிலை ஏற்​பட்​டாலும், முதலீட்​டாளர்​களின் பணத்​துக்கு சுவிஸ் வங்​கி​கள் பாது​காப்பு வழங்​கு​கின்​றன. இது​போன்ற பல்​வேறு காரணங்​களால் அரசி​யல்​வா​தி​கள், நடிகர்​கள், நடிகைகள், தொழில​திபர்​கள், கோடீஸ்​வர்​கள் என பல தரப்​பினரும் சுவிஸ் வங்​கி​களில் பெரும் பணத்தை போட்டு வைக்​கின்​றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow