‘சுய இன்பம்’ பாவச் செயலா? - தெளிவு தரும் உளவியல் நிபுணர்களும் ஆய்வுகளும்!
அன்றைக்கும், இன்றைக்கும் பாவச் செயலாக பார்க்கப்படும் ‘சுயமைதுனம் / சுய இன்பம்’ குறித்து இக்குறுங்கட்டுரையில் வெளிப்படையாகப் பேச முயற்சிப்போம், ஒரு தெளிவு பிறப்பதற்காக..

‘சுயமைதுனம்’ இயல்பானதே என்று பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளும் தெளிவுபடுத்தியிருந்தாலும் கூட அதனைப் பற்றிய பேச்சுக்களில் தயக்கம் நீடிப்பதுடன், அதை ஓர் இழுக்கானதாகவே இன்றளவும் பார்க்கும் போக்கு தொடர்கிறது. சுயமைதுனம் தொடர்பான பேச்சுக்கள் ஏன் பலரையும் அவ்வாறாக அசவுகரியமாக, இழுக்கானதாக உணரவைக்கின்றன, இல்லை பேசப்படக் கூடாத பேச்சாக உணர வைக்கின்றன என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அன்றைக்கும், இன்றைக்கும் பாவச் செயலாக பார்க்கப்படும் ‘சுயமைதுனம் / சுய இன்பம்’ குறித்து இந்தக் குறுங்கட்டுரையில் வெளிப்படையாகப் பேச முயற்சிப்போம், ஒரு தெளிவு பிறப்பதற்காக..
சுய இன்பம், சுயமைதுனம், கைப்பழக்கம் எனப் பல பெயர்களைக் கொண்ட இந்தப் பழக்கத்துக்கு, ஆங்கிலத்தில் மாஸ்டர்பேஷன் (Masturbation) என்று பெயர். வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால் சுயமைதுனம் தொடர்பாக பல்வேறு கலாச்சாரங்களிலும் பல்வேறு கருத்துகளும், கட்டுக்கதைகளும் புதைந்து கிடக்கின்றன. எகிப்து நாட்டின் கலாச்சாரத்தின்படி சுயமைதுனத்தை புனிதமாகக் கருதுகின்றனர். பண்டைய கிரேக்க கலாச்சாரம் அதனை இயல்பானதாகக் கருதினாலும் அதைச் சுற்றி ஏதும் புனிதத்தை கட்டமைக்கவில்லை. ரோமானியர்களோ ஆண் - பெண் பாலியல் உறவே இயல்பானது. சுயமைதுனம் நீச்சமானது என்று கூறுகின்றனர்.
What's Your Reaction?