சீனாவில் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ 

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் வெளியாகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள சீன மொழி போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Nov 15, 2024 - 19:15
 0  6
சீனாவில் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ 

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள சீன மொழி போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மகாராஜா’. அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்து இந்தப் படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்தார். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow