சீன இறக்குமதி பொருட்களுக்கு 245% வரி விதித்தது அமெரிக்கா!

சீன பொருட்களின் இறக்குமதிக்கு தற்போது 245 சதவீதம் வரையிலான வரிவிதிப்பை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அடிப்படையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Apr 17, 2025 - 10:35
 0  4
சீன இறக்குமதி பொருட்களுக்கு 245% வரி விதித்தது அமெரிக்கா!

வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக சீனா அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வாகனம், விண்வெளி, செமிகண்டெக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு இன்றியமையாததாக விளங்கும் மிகவும் அரிதான உலோகங்கள் மற்றும் காந்தங்கள் உள்ளிட்ட முக்கிய உயர் தொழில்நுட்பப் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்த சீனா முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, முக்கியமான இறக்குமதிகள் குறித்த தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow