சிம்புவின் 50-வது படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி
நடிகர் சிம்பு தனது 50-வது படம் குறித்த அப்டேட்டை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிம்பு தயாரிக்கிறார்.

நடிகர் சிம்பு தனது 50-வது படம் குறித்த அப்டேட்டை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிம்பு தயாரிக்கிறார்.
“இறைவனுக்கு நன்றி! Atman சினி ஆர்ட்ஸ் மூலமாக தயாரிப்பாளராக ஒரு புதிய பயணத்தில் நான் அடியெடுத்து வைக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் தேசிங்கு பெரியசாமிக்கும் ட்ரீம் ப்ராஜக்டாக உள்ள படத்தை எனது 50-வது படமாக தொடங்குவதை விட வேறு எதுவும் சிறந்தது இல்லை. இந்து எங்கள் நெஞ்சோடு கலந்து. இந்தப் புதிய முயற்சியை ஆவலோடு எதிர்நோக்கி உற்சாகமாக இருக்கிறேன். எப்போதும் போல உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்! நீங்க இல்லாமல் நான் இல்ல!” என சிம்பு தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?