சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

Dec 3, 2024 - 19:30
 0  4
சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை: புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் வரும் டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறது.

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் அடுத்து இயக்கியுள்ள படம், ‘மிஸ் யூ’. இதில் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ளார். ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow