சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து கம்மின்ஸ், ஹேசில்வுட் விலகல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.

Feb 7, 2025 - 08:00
 0  2
சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து கம்மின்ஸ், ஹேசில்வுட் விலகல்

காலே: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். இருவருக்கும் காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாயினிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 35 வயதான ஸ்டாயினிஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஏற்கெனவே மற்றொரு ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் முதுகு வலி காரணமாக விலகி இருந்த நிலையில் தற்போது ஸ்டாயினிஸின் ஓய்வு ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow