ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதல் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதும் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

Jun 11, 2025 - 08:55
 0  4
ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதல் இன்று தொடக்கம்

லண்டன்: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதும் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து வடிவிலான உலகக் கோப்பை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டங்களில் அந்த அணியை வீழ்த்துவது என்பது மற்ற அணிகளுக்கு கடினமாகவே இருந்து வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் 13 முறை இறுதிப் போட்டியில் கால்பதித்து 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow