சவுதி அரேபியாவில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம்: 204 இடங்களுக்கு மல்லுக்கட்டும் 1,574 பேர்

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் இன்றும் (24-ம் தேதி), நாளையும் (25-ம் தேதி) சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது.

Nov 24, 2024 - 04:40
 0  4
சவுதி அரேபியாவில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம்: 204 இடங்களுக்கு மல்லுக்கட்டும் 1,574 பேர்

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் இன்றும் (24-ம் தேதி), நாளையும் (25-ம் தேதி) சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் காணலாம். இந்த ஏலத்துக்காக 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் 574 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 366 பேர் இந்திய வீரர்கள், 208 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் 48 பேரும், வெளிநாட்டு வீரர்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய 193 பேரும், உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 3 பேரும், இந்திய அணிக்காக அறிமுகம் ஆகாத 318 பேரும், வெளிநாட்டு வீரர்களில் சர்வதேச போட்டியில் களம் காணாத 12 பேரும் அடங்குவார்கள். இந்திய நட்சத்திர வீரர்கள் அனைவரது அடிப்படை விலையும் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow