சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து வில்லியம்சன் ஓய்வு!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

Nov 2, 2025 - 16:40
 0  4
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து வில்லியம்சன் ஓய்வு!

சிட்னி: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 வயதான அவர், நியூஸிலாந்து அணிக்காக 93 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2011-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் விளையாடி இருந்தார். அவர் தலைமையிலான நியூஸிலாந்து அணி, 2021 டி20 உலகக் கோப்பை இறுதி, 2016 மற்றும் 2022 அரையிறுதி ஆட்டத்திலும் விளையாடி இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow