சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த தண்ணீர் + மஞ்சள் ரீல்ஸ் பதிவுகள்!

தற்போது இணைய உலகை ஆட்டிப் படைப்பது ரீல்ஸ்கள் தான். இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் ட்ரெண்டாகி வருகிறது. இன்​றைய டிஜிட்டல் யுகத்​தில் சமூக வலை​தளங்​களில் புதிய புதிய அப்​டேட்​கள் அவ்​வப்​போது வைரலாகி கொண்டு வரு​கின்​றன. கடந்த சில நாட்​களாக ஃபேஸ்​புக், வாட்​ஸ்​அப், இன்​ஸ்​டாகி​ராம், எக்ஸ் தளங்​களில் ட்ரெண்​டிங்​கில் இருப்​பது இந்த தண்ணீர்-மஞ்சள் வீடியோ தான். 

Jun 23, 2025 - 19:35
 0  4
சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த தண்ணீர் + மஞ்சள் ரீல்ஸ் பதிவுகள்!

தற்போது இணைய உலகை ஆட்டிப் படைப்பது ரீல்ஸ்கள் தான். சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விஷயங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. இன்​றைய டிஜிட்டல் யுகத்​தில் சமூக வலை​தளங்​களில் புதிய புதிய அப்​டேட்​கள் அவ்​வப்​போது வைரலாகிக் கொண்டு வரு​கின்​றன. அந்த வகையில், கடந்த சில நாட்​களாக ஃபேஸ்​புக், வாட்​ஸ் ​அப், இன்ஸ்​டாகி​ராம், எக்ஸ் தளங்​களில் ட்ரெண்​டிங்​கில் இருப்​பது இந்த தண்ணீர் - மஞ்சள் ரீல்ஸ் வீடியோக்கள்தான்.

குறிப்பாக இருண்ட இடத்தில் செல்போன் டார்ச்சினை ஆன் செய்து வைத்துக்கொண்டு, எதிரே ஒரு கண்ணாடி கிளாஸை வைத்து, அதில் முதலில் தண்ணீரை நிரப்புகிறார்கள். அதன் பின்னர் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூளை போடுகிறார்கள். அப்போது அது வித்தியாசமான ஜொலிக்கும் நிறத்தை கொடுக்கிறது. பின்னணியில், ஷாரூக் - தீபிகாவின் ‘ஓம் ஷாந்தி ஓம்’ பாடல் இசை. பார்ப்பதற்கும் கியூட்டாக இருக்கிறது. இதை குழந்தைகள் வியப்போடு பார்க்கும் பதிவுகளும் ஈர்க்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow