சபரிமலையில் இன்று மண்டல பூஜை: தங்க அங்கி அணிவித்து வழிபாடு; 23-ம் தேதி வரை 31 லட்சம் தரிசனம்
சபரிமலையில் மண்டல பூஜைக்கு பிறகு இன்று இரவு நடை அடைக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜைக்காக 30-ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.

சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்கு பிறகு இன்று இரவு நடை அடைக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜைக்காக 30-ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளதாவது: சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முதல் கட்டயாத்திரை மண்டல பூஜையுடன் நிறைவடையும். இந்த மண்டல பூஜையை தந்திரி கண்டரரு ராஜீவரு இன்று (டிச.26) மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறார். மண்டல பூஜை மற்றும் நெய் அபிஷேகத்துக்கு பிறகு ஐயப்பன் கோயில் நடை இன்று இரவு 11 மணிக்கு மூடப்படும். இத்துடன் சபரிமலையில் முதல்கட்ட யாத்திரை நிறைவடைகிறது.
What's Your Reaction?