சபரிமலையில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிச. 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். தினமும் அதிகாலை 3 முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் இரவு 11 மணி வரையிலும் என மொத்தம் 18 மணி நேரத்துக்கு நடை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பதிவுசெய்து நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர எருமேலி, பம்பை ஆகிய இடங்களில் ‘ஸ்பாட் புக்கிங்’ செய்தும் அனுமதி வழங்கப்படுகிறது.
What's Your Reaction?